கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சுந்தர். இவரது மூத்த மகன் சியாம்கிருஷ்ணா(8). தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் சித்தார்த் கிருஷ்ணா(2). சுந்தர் தம்பதியர் கடந்த 20ஆம் தேதி மகன் சித்தார்த்திற்கு இரண்டாவது பிறந்தநாளை வீட்டில் எளிமையாக கொண்டாடினர்.
கரூர் வைசியா வங்கியில் ஜூனியர் வங்கி கணக்கு வைத்துள்ள சியாம்கிருஷ்ணா, அதில் ரூ.2000க்கு மேல் சேர்த்தும் வைத்திருந்தார். தனது தம்பி இரண்டாவது பிறந்தநாளுக்கு, தம்பிக்கு பரிசு பொருள் வாங்க சியாம் அந்தப் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கரோனாவை ஒழிக்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உதவ தான் சேமித்து வைத்திருந்த பணத்தை ஜூனியர் வங்கி கணக்கு மூலமாக தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2022/- அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தி அறிந்து குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ரா.மாணிக்கம், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்தார். அப்போது, திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரோனா நிவராண நிதி வழங்கிய சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள்! - கரூர் குளித்தளலை செய்திகள்
கரூர்: தனது வங்கி சேமிப்புத் தொகை முழுவதையும் முதலமைச்சர் நிதிக்கு அனுப்பிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கரோனா நிவராண நிதி வழங்கிய சிறுவனுக்கு குவியும் பாராட்டு!