கரூர்:ஜவகர் பஜார் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடை, நகைகடை, பாத்திரக்கடைகள் இயங்கி வருகின்றனர். இன்று காலை 10 மணி அளவில், பஜார் வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் நகைக்கடையில் வணிக வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பிரபல நகைகடையில் வணிக வரித்துறை சோதனை..! - ஸ்ரீ கணேஷ் நகைக்கடை
கரூரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட வணிக வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வணிக வரித்துறை
சுமார் 10 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட குழுவால் தொடங்கப்பட்ட சோதனை இரவு 9 மணியை கடந்த நிலையில், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நகை கடையில் எவ்வித முறைகேடான ஆவணங்களும் கிடைக்கப்பெற்றதாக சோதனையில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் தரப்பில் எவ்வித செய்தி குறிப்பும் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்