கரூர் மாவட்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பத்து வகுப்பறைகளும், மூன்று ஆய்வுக் கூடங்களும் உள்ளன. இதன் மதிப்பு இரண்டு கோடியே 65 லட்சம் ஆகும்.
கரூர் அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடங்களை திறந்துவைத்த பழனிசாமி! - முதலமைச்சர் பழனிசாமி
கரூர்: அரசு கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.
கல்லூரி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தலைமை வகித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தையும் முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.