தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தம்: கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை - நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தம்

கரூர்: நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதால் விரக்தியில் கல்லூரி விரவுரையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

College
College

By

Published : Apr 20, 2021, 12:35 PM IST

கரூர் வாங்கபாளையத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (29). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். இதனிடையே தமிழ்ச்செல்வனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துவந்துள்ளனர்.

இதில் பெண் வீட்டார் நிச்சயித்த திருமணத்தை திடீரென நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு தமிழ்ச்செல்வன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார்.

அப்போது தமிழ்ச்செல்வனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கரூர் வெங்கமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details