தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த தேவையான பொருட்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியை குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பொருள்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பொருள்கள் ஆய்வு
கரூர்: வாக்குச்சாவடி மையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான கையுறைகள், வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முகக்கவசங்கள் , கிருமி நாசினி, பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மண்டல அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வின்போது குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரகுமான்,குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.