கந்துவட்டி வசூலிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர் எச்சரிக்கை - action will be taken against the person who collects usury
கரூரில் கந்துவட்டி வசூல்செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் எச்சரிக்கை
By
Published : Aug 10, 2021, 9:25 AM IST
கரூர்: நடுத்தர மற்றும் வறுமையில் வாடும் மக்களின் குடும்ப தேவைக்காக வாங்கும் கடனுக்கு அவர்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்தி கடன் கொடுப்போர் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என வட்டி வசூலிக்கின்றனர். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் வாங்கிய மக்கள் வட்டியும் கட்ட இயலாமல் அசலும் தர முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் பணத்தை வசூலிக்க அடியாள்களை வைத்து மிரட்டி கந்துவட்டி வசூலில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்க 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்பவர் நெறிப்படுத்தும் சட்டமும், 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு கந்துவட்டி வசூலித்தல் தடைச்சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதனடிப்படையில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளடக்கிய சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கந்துவட்டியைத் தடுக்க நடவடிக்கை
தற்சமயம் கரோனா காலகட்டத்தில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத சூழலில் மக்கள் பலர் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் தொடர்ந்த வந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கோட்ட அளவிலான குழுக்களும், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் தலைமையில் வட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் கந்துவட்டி தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கந்துவட்டி தொடர்பான புகார்களை மக்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமோ, வட்டாட்சியரிடமோ, கோட்டாட்சியரிடமோ அல்லது மாவட்டத்தின் பிரத்யேக வாட்ஸ்அப் எண் 94898 40055 மூலமாகவோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக ட்விட்டர் Twitter @Collectorkarur மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
மேலும்,
வருவாய் கோட்டாட்சியர்கள்
தொலைபேசி எண்
வாட்ஸ்அப் எண்
கரூர்
04324-274038
9445000453
குளித்தலை
04323-222395
9445000454
வட்டாட்சியர்கள்
தொலைபேசி எண்
வாட்ஸ்அப் எண்
கரூர்
04324-260745
9445000598
குளித்தலை
04323-222015
9445000600
அரவக்குறிச்சி
04320-230170
9445000599
கிருஷ்ணராயபுரம்
04323-243950
9445000601
கடவூர்
04323-251444
9445461822
மண்மங்கலம்
04324-288334
9445461817
புன்செய் புகளூர்
-
7200440680
ஆகிய அலுவலர்களின் தொலைபேசி எண்களில் புகார்களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கந்துவட்டி புகார்களுக்கு என்று பிரத்யேகமாக அஞ்சல் பெட்டி வைக்கப்பட்டு, அதில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.