கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்துராவுத்தன்பட்டி ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - கரூர் மாவட்ட செய்திகள்
கரூர்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Collector inspection collector camp in karur
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்காக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கரோனா வைரஸ் தொற்று பரவும் விதம் குறித்தும், அதிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.