கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் பேரூராட்சியில் தலைவராக நான்கு முறை பதவி வகித்த சித்தலவாய் பகுதியில் வசிக்கும் மீசை செல்வராஜ் அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றுள்ளார்.
கூட்டுறவு வங்கி செயலாளராக உள்ள கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பிரமுகரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவருமான வேணுகோபால் ஆகியோர் உதவியுடன், சேங்கல் ஊராட்சியில் உள்ள சின்ன சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி நிலத்திற்கு பயிர்க்கடனாக ஒரு லட்சம் ரூபாய் வரை மீசை செல்வராஜ் பெற்றுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலத்திற்கான சர்வே எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.