கரூர் வெண்ணைமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்காக ஆப்பரேட்டர் அட்வான்ஸ்டு கருவி வகுப்பறை, தொழில் பிரிவுக்கான புதிய வகுப்பறை, புதிய தொழில் பயிற்சி கூடம் ஆகியவை ரூபாய் 82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
82 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொழிற்பயிற்சி கட்டடங்கள் - முதலமைச்சர் திறந்துவைப்பு - காணொளி மூலம் தொழிற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்
கரூர்: வெண்ணைமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

தொழிற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்த முதலமைச்சர்
பின்பு கரூர் மாவட்ட ஆட்சியர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மாரீஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தொழிற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்த முதலமைச்சர்
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு