கரூர் மாவட்டத்திற்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 43.50 கோடி மதிப்பில் 10 பணிகள் நடைபெற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பள்ளபாளையம் ராஜ வாய்க்காலில் ரூ. 43.50 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுதல், முட்புதர்களை அகற்றி தூர்வாரும் பணிகளுக்கான பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 748 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த குடிமராமத்து திட்டத்தின் படி தாராபுரம் அமராவதி வடிநில கோட்டத்தின் கீழ் 6 பணிகள் ரூ. 197.50 கோடிக்கும், பழனி நங்காஞ்சி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் இரண்டு பணிகள் ரூ. 16 லட்சத்திற்கும், திருச்சி காவிரி ஆற்று பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பணிகள் ரூ. 30 லட்சத்திற்கும் செயல்படுத்தப்படவுள்ளது.
கரூரில் குடிமராமத்து திட்ட பணி தொடக்கம் - குடிமராமத்து திட்ட பணி
கரூர்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 43.50 கோடி மதிப்பிலான பணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
![கரூரில் குடிமராமத்து திட்ட பணி தொடக்கம் தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைக்கும் காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7392531-thumbnail-3x2-krr.jpg)
தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைக்கும் காட்சி
கரூர் மாவட்டத்தில் 7147.930 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த மதிப்பு ரூ. 243.50 கோடியாகும்.
இதையும் படிங்க:அலியாபாத் அணைக்கட்டு பாராமரிப்பு பணி: 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு