தமிழ்நாடு

tamil nadu

தேவாலயத்தில் பாலியல் புகார் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு

By

Published : Dec 9, 2019, 10:21 PM IST

கரூர்: தேவாலயத்தில் பாலியல் புகார்கள் தொடர்வதாகவும், தேவாலயத்திற்குச் சென்ற மூன்று பேர் எங்கு என்று கேட்டால் இறந்து விட்டதாகக் கூறும் பாதிரியார் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாதிரியார் மீது நடவடிக்கை
பாதிரியார் மீது நடவடிக்கை

கரூரை அடுத்த ஆண்டாங்கோயில் அஞ்சல், ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 68). இவரது சித்தி நாச்சம்மாள், சித்தியின் மகள் பாப்பாயி மற்றும் அவரது மகன் நல்லச்சாமி ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக சின்ன ஆண்டாங்கோயில் முதல் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள லீபனோன் ஆஃப் கார்டு கிறிஸ்துவ சபைக்குச் சென்று வந்துள்ளனர்.

பின்னர் அந்த தேவாலயத்துக்குத் தேவையான பணிகள் செய்து வந்துள்ளனர். நாச்சம்மாளுக்கு வயதானதால், சுயநினைவு இல்லாமலும் அவரது மகள் லேசாக மனக் குறையுடன் காணப்பட்ட நிலையில், மகனுக்கும் கண் பார்வை குறைவாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை என்று கருதி, அவரது உறவினர் கந்தசாமி என்பவர் அந்த தேவாலயத்தில் சென்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு மற்றும் அவரது மகன் உதவி பாதிரியாரான சாம்மங்கள்ராஜ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். ஆகையால், மனமுடைந்த கந்தசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் தலைமையில் இன்று கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலரிடம் மனு ஒன்றினை கொடுத்தார்.

அதில், ' அந்த சர்ச்சில் ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அதை வீடியோவாக்கி, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிரியார் மீது புகார்

அதனையொட்டி கரூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து பிணையில் இருக்கும் நபர்களான பாதிரியார் மற்றும் அவரது மகன் உதவி பாதிரியார் ஆகியோரிடம் தற்போது நாச்சம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினைப் பற்றி கேட்டோம். அப்போது அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட முடியாத முறையில் இறந்து விட்டதாகவும், நாச்சம்மாள் ரத்தம் சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் எப்படி இறந்தார்கள் என்று கூறவில்லை. இறப்பு குறித்து கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.'

மேலும், 'சர்ச்சிற்கு புதிய பாதிரியார் வந்தும் அந்தப் பாதிரியாரையும் பணி செய்ய விடாமல் தடுத்து வரும் மோசஸ் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும்' அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

'விண்வெளியில் தொடங்கியாச்சு ஹோட்டல்' - குடியேறப் போறது யாருனு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details