தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் ஆபாச வீடியோ கைது லிஸ்டில் வடமாநில இளைஞர்! - குழந்தைகள் ஆபாச வீடியோ கைது செய்யப்பட்டவர்கள்

கரூர்: சலூன் கடையில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

child-pronography-issue-north-indian-youngster-arrested-in-karur
கைது

By

Published : Jan 30, 2020, 8:00 PM IST

கரூர் வையாபுரி நகரில் உள்ள சலூன் கடை ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் கச்சனால் என்ற பகுதியைச் சேர்ந்த நியாஸ் அலி (வயது 23) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், ஆன்லைனில் ஆபாச படங்கள் வெளியிடுவது தொடர்பான தகவல் தொடர்பு குற்றப்பிரிவு 67, 67 பி, 67 பி(பி), குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சட்டமான போக்கோ சட்டப்பிரிவின் 13, 14 (1)15 ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து நியாஸ் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பான கைது லிஸ்டில் அடுத்து வடமாநில இளைஞர்!

குழந்தைகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது, மேலும் அதனை வெளியிடுவது குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது கரூரிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

இதையும் படியுங்க: ஃபேஸ்புக்கில் ஆபாச காணொலி பகிர்வு: அஸ்ஸாம் இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details