தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1 வயது குழந்தை உயிரிழப்பு! - தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கரூர்: நெரூர் பகுதியில் 1 வயது குழந்தை தண்ணீர் தொட்டியின் உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

By

Published : Oct 12, 2020, 2:14 PM IST

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட நெரூர் வடபாகம் பகுதியில் தண்டபாணி என்பவரின், இளனியா என்ற 1 வயது பெண்குழந்தை வீட்டின் பின் பக்கத்தில் விளையாடிகொண்டிருந்தது.

அப்போது, தரையில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் தந்தை தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தையை மீட்டு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து வாங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொந்தக் குழந்தை பிறந்த 2 நாளில், தத்தெடுத்த குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி!

ABOUT THE AUTHOR

...view details