கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்றப் பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க இருக்கிறார்.
இந்நிலையில், கரூரில் அவரை வரவேற்பதற்கு வீதி எங்கும் அலங்காரங்கள், பிரத்யேகமாக கிராமியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரை வரவேற்க பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கட்டைக்கால், தப்பாட்டம், பறையாட்டம் உள்பட பல கிராமிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்பாடுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராமிய கலைகள் இதையும் படிங்க:நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள் விழா: அனைத்து இந்திய கிராமிய கலைஞர்கள் பங்கேற்பு