கரூர் காந்தி கிராமத்தில் வசித்துவரும் போதும் பொண்ணு, 105 பேர் கொண்ட சுய உதவிக் குழுவில் தலைவியாக உள்ளார். இவர் கரூர் நகரில் உள்ள விசாகம் கேபிடல் தனியார் நிதி நிறுவனத்தில், தான் நடத்தும் குழு உறுப்பினர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 15 ஆயிரம் வீதம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
வாரம் ரூபாய் 900 இதற்கான வட்டியும், அசலும் என ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற அன்னலட்சுமி மூலம் செலுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் அம்மு என்ற அன்னலட்சுமி என்பவர் கடந்த 10 வாரங்களாகச் செலுத்தக்கூடிய தொகையை வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கடன் கொடுத்த நபர்களைத் தொடர்புகொண்டு, கடனைச் செலுத்தச் சொல்லி கூறியுள்ளது. இதனால் நேற்று (ஏப்ரல் 26) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணத்தை இழந்த 15-க்கும் பெண்கள் மனு அளித்தனர்.