தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு! - கரூர் அண்மைச் செய்திகள்

கரூர் : இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 6, 2021, 7:32 AM IST

கரூர் மாவட்டம் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணியோடு (ஏப்ரல் 4) தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தனர்.

இந்நிலையில் கரூர் கோவை சாலை முதல் 80 அடி சாலைவரை இறுதிக்கட்ட பரப்புரையின்போது தேர்தல் விதிகளை மீறியதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தேர்தல் பணிமனை முன்பு அளவுக்கதிகமான கூட்டத்தை திரட்டியதாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் அதிமுக கொடி கட்டி ஒலிபெருக்கி மூலம் வாக்கு சேகரித்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் (44) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் திமுக கொடிகளை கட்டி வாகன பேரணி நடத்திய 23 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :நேர்த்தியாக நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details