சாலையை கடக்க முயன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் காரில் மோதி உயிரிழப்பு! - சுக்காலியூர் விபத்து
கரூர்: தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுக்காலியூர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
![சாலையை கடக்க முயன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் காரில் மோதி உயிரிழப்பு! Accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9481299-1085-9481299-1604869184279.jpg)
Accident
சிவகங்கை மாவட்டம் நெடுங்குளம் ஆண்டிச்சியுரணி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (47). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்று தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும்போது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுக்காலியூர் என்ற இடத்தில் உணவருந்திவிட்டு சாலையைக் கடக்க முயற்சித்தார். அப்போது, சதீஷ்குமார் (36) என்பவரது கார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜோசப் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜோசப் உயிரிழந்தார்.