கரூர் மாவட்டம் முன்னூர் ஊராட்சியைச் சேர்ந்த வேலம்பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றிருந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி காவல் துறையினர், அந்தக் காரில் ஆண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதை அறிந்தனர்.
இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.