தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஸ்க்குல இரும்பு போல்ட் - மிரண்ட வாடிக்கையாளர்! - இரும்பு போல்ட் ரஸ்க்

கரூர்: பேருந்து நிலைய கடையில் இருந்து பிரிட்டானியா ரஸ்க் வாங்கிச் சென்று உண்ணும்போது அதனுள் இரும்பு போல்ட் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

metal bolt in britannia rusk

By

Published : Nov 22, 2019, 11:26 PM IST

கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த பொராணி கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கரூர் பேருந்து நிலையத்தில் பிரிட்டானியா ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது ஏதோ கல் இருப்பது போல் தட்டுப்பட, என்னவென்று பார்த்துள்ளார். அதில் ஒரு ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உடனடியாக அதை அப்படியே எடுத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தார். மேலும் அந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பது சாப்பிடும்போதுதான் தெரிந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

பாஜகவால் வீழ்ந்த பார்லே - ஜி ராஜ்ஜியம்!

மேலும் ரஸ்க் பொட்டலம் தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் விவேகானந்தன். பேருந்து நிலையங்களில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

பிரிட்டானியா ரஸ்கில் இருந்த இரும்பு போல்ட்

இதுகுறித்து அலுவலர்கள் தெரிவித்தபோது, எந்திரத்தின் உதவியுடன்தான் ரஸ்க்கிற்கான மாவு கலக்கப்படுகிறது என்றும், மாவு கலக்கும் எந்திரத்திலிருந்து போல்ட் கழன்று விழுந்திருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். எனினும் விவேகானந்தனின் புகார் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரிட்டானியா நிர்வாகம் தவறை ஒத்துக் கொள்ளாமல் வேறு பொட்டலம் தருவதாகக் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details