ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பயிலும் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கரூரில் தனியார் பள்ளி போக்குவரத்து பேருந்துகளில் தரம் குறித்த ஆய்வு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றது.
கரூரில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளில் ஆய்வு - கரூர் பள்ளி கல்லூரி பேருந்து ஆய்வு
கரூர்: தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகளின் தரம் குறித்து கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
![கரூரில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளில் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3251580-thumbnail-3x2-bus.jpg)
பள்ளி பேருந்துகள் ஆய்வு
இதில் குளித்தலை, அரவகுறிச்சி, மன்மங்கலம் ஆகிய நான்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 400-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி மற்றும் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் இருக்கிறதா போன்ற ஆய்வுகளை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
கரூரில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன