ராமநாதபுரம் கீழக்கரை கோகுல் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் துபாயில் கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்துவந்தார். இவர் ஒரு மாத விடுப்பில் ஊர் திரும்பினார்.
இதையடுத்து, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தவகுமார். இவரது மகன் லோக பிரசன்னா (16). இவர் ராமநாதபுரத்தில் பிளஸ் 1 படித்துவந்தார். மேலும், இவர்கள் இருவரும் மாமன், மருமகன் உறவு முறையாவர்.
இந்நிலையில், இருவரும், நேற்றிரவு நடந்த வள்ளி மாடன்வலசை சுடலைமாடன் கோயில் மாசி களரி திருவிழாவில் கலந்துகொண்டனர். இதன்பிறகு, இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் அருகே அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து ரெகுநாதபுரம் சென்ற அரசு நகரப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாத உயிரிழந்தனர். மேலும், ஒரு மாத விடுப்பில் ஊர் திரும்பிய செந்தில் குமார் மார்ச் 23ல் மீண்டும் துபாய் செல்ல இருந்தார். இந்நிலையில் விபத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!