தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கிளர்ச்சியை தூண்டுபவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’ - கருப்பு முருகானந்தம் - பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்

கரூர்: பொதுமக்களிடையே கிளர்ச்சியை தூண்டுபவர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும், அது திமுக தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும் பரவாயில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கருப்பு முருகானந்தம்
செய்தியாளர்களை சந்தித்த கருப்பு முருகானந்தம்

By

Published : Mar 17, 2020, 10:03 PM IST

கரூர் மாவட்டத்தில் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ‘ஊருக்குச் செல்வோம் உண்மையை சொல்வோம் உரக்கச் சொல்வோம்’ என்ற தலைப்பின் கீழ் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில், இந்நிகழ்ச்சியை கரோனா தடுப்பு பயிற்சியாக மாற்றி பயிற்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இதில், தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக கைகளைக் கழுவுதல், முகத்தை மூடி வைத்தல் போன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், பரவிவரும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக காலத்தின் கட்டாயம் கருதி மாற்றி அமைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டுமென கூறிவருகிறார். வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அதனால் ஒத்துழையாமை இயக்கம் நாம் நடத்தினோம். தற்போது யார் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கருப்பு முருகானந்தம்

மத்திய அரசு நாட்டுக்கு பாதுகாப்பான நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதுவாக சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே கிளர்ச்சியை தூண்டுபவரைக் கைது செய்ய வேண்டும். அது திமுக தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குடியுரிமை சட்டத்தை வைத்து எதிர் சித்தாந்தவாதிகளை பழி தீர்க்க பாஜக நினைக்கிறது’ - கரு. பழனியப்பன்

ABOUT THE AUTHOR

...view details