தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைவர் அண்ணாமலை: பாஜக Vs காவல் துறை

கரூர் : பாஜக மாநிலத் தலைவராக நேற்று (ஜூலை. 8) அண்ணாமலை பொறுப்பேற்றதை அடுத்து பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

bjp men argument with police
bjp men argument with police

By

Published : Jul 9, 2021, 6:34 PM IST

பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவால் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அவ்வழியாக வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காவல் துறை அலுவலர்களை அழைத்து உடனடியாக பாஜகவினரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

இதன் பின்னர் கரூர் நகர டிஎஸ்பி சீனிவாசன் பாஜகவினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். ஆனால் மற்ற கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது எங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தி பாஜகவினரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் கரூர் எஸ்பியுடன் வாக்குவாதத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதன் பிறகு கைது நடவடிக்கை கைவிடப்பட்டதால் பாஜகவினர் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி, "ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுகின்றனர்.
கரூரில் சட்டம்-ஒழுங்கு, கள்ளச்சாராயம், சந்து கடை மது விற்பனை ஆகியவற்றை தடுக்கவில்லை. இங்கேயே பிறந்து வளர்ந்து காவல் துறையில் உயர் பதவி வகித்து தற்போது பாஜக தலைமையை ஏற்ற இளம் தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


இதனை எளிமையான முறையில் கொண்டாடிவருகிறோம். ஆனால் அதனை தடுக்க காவல் துறையினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்றார்.

இதையும் படிங்க:திமுக ஆட்சி - தற்கொலை செய்து உயிரை காணிக்கையாக செலுத்திய முதியவர்

ABOUT THE AUTHOR

...view details