தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு! - கரூர் அண்மைச் செய்திகள்

கரூர் : மிரட்டும் தொனியில் பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு

By

Published : Apr 2, 2021, 5:35 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் தொனியில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதுகுறித்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இந்திய தேர்தல் ஆணையம், காவல்துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று (ஏப். 2) அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கமல்ஹாசன், டார்ச்லைட்டை வீசியது சித்தரிக்கப்பட்டது - ஸ்ரீபிரியா

ABOUT THE AUTHOR

...view details