கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட கஞ்சமனூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மாரிமுத்து (40). இவர் இருசக்கர வாகனத்தில் உப்பிடமங்களத்தில் இருந்து சேங்கல் நோக்கி செல்லும்போது சின்னசேங்கல் பெட்ரோல் பங்க் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும்போது எதிரே வேகமாக வந்த டிராக்டர், இருசக்கர வாகனம் மீது மோதியது.
டிராக்டர் மோதி ஒருவர் பலி - bike accident
கரூர்: சின்ன சேங்கல் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
bike accident
விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாயனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.