கரூர் மாநகராட்சியில் உள்ள காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் ரூ. 6.75 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு புதிய பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடக்கிவைத்தார்.
சுமார் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்த காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் புரனமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, இன்று புதிய காய்கறி வணிக வளாகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரூர் காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் மூலம் பழக்கடைகள், காய்கறிக்கடைகள், வாழை மண்டிகள், மளிகைக்கடைகள், கறிக்கடைகள், டீக்கடைகள் என மொத்தமாக 174 கடைகளை ஒருங்கிணைத்து இந்த மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது.