தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிலும் பீஸ்ட்டுக்கு தடையா? - ரசிகர்கள் அதிர்ச்சி! - ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடித்து நாளை (பிப்ரவரி 13) வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் கரூர் திரையரங்குகளில் வெளியாகாது என கரூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் கரூர் திரையரங்குகளில் வெளியாகாது
பீஸ்ட் திரைப்படம் கரூர் திரையரங்குகளில் வெளியாகாது

By

Published : Apr 12, 2022, 5:31 PM IST

கரூர்:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியிடவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் நகர்ப் பகுதியில் அஜந்தா, எல்லோரா, திண்ணப்பா, அமுதா, பொன் அமுதா, கலையரங்கம், கவிதாலயா போன்ற மல்டி ஃபிளெக்ஸ் ஏசி திரையரங்குகள் செயல்பட்டுவருகின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தை கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை மறு நாளில்(ஏப்ரல் 14) யாஸ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கான டிக்கெட் புக்கிங் இணையம் மூலம் நடைபெற்று வருகிறது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் கரூர் திரையரங்குகளில் வெளியாகாது
பீஸ்ட் திரைப்படம் கரூர் திரையரங்குகளில் வெளியாகாது

இதையும் படிங்க:தொடங்கிய அஜித்தின் 'AK61' திரைப்பட படப்பிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details