தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கூடைப்பந்து போட்டி தொடக்கம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கரூர்: திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்து போட்டி இன்று (மார்ச் 4) தொடங்கியது.

கூடைப்பந்து போட்டி தொடக்கம்
கூடைப்பந்து போட்டி தொடக்கம்

By

Published : Mar 4, 2021, 11:00 PM IST

கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழகம், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 5ஆம் ஆண்டு கூடைப்பந்து போட்டி கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடத்தின. இந்தப் போட்டி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதிமுகவின் கரூர் நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இப்போட்டியைத் தொடங்கிவைத்தனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட அணிகள் இந்தக் கூடைப்பந்துப் போட்டியில் கலந்துள்ளனர்.

குறிப்பாக கரூர், கோவை, நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, மதுரை உள்ளிட்ட 30 மாவட்ட சிறந்த அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இன்று கரூர் - நாகப்பட்டினம், திருச்சி - ஈரோடு, சேலம் - மதுரை, திண்டுக்கல் - திருச்சி ஆகிய அணிகள் மோதின.

இதையும் படிங்க: மாநில அளவிலான சப் ஜூனியர் வாள் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்!

ABOUT THE AUTHOR

...view details