ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலக எலும்புப்புரை தினமானது உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த எலும்புப்புரையானது வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாட்டினால் ஏற்படுவதாகும்.
இந்நிலையில், இன்று (அக்.20) கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எலும்புப்புரை தினத்தை முன்னிட்டு ’வளமான முதுமைக்கு வலுவான எலும்புகள் தேவை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் கலந்து கொண்டு, எலும்புப்புரை ஏற்படாமல் இருக்க முறையான உடற்பயிற்சியுடன், கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.