கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கரூர் வையாபுரி நகரில் வசித்து வரும் ராம் பிரசாத் என்பவர், கடந்த 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனிடையே வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ராம்பிரசாத், ஈடிவி பாரத்துக்கு பிரத்தியோக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக, வேலையில்லாமல் திருப்பூர் சென்று வேலை செய்து வந்தேன். ஆனால் அங்கு வேலை சரிவர அமையாததால், என்னால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. வீட்டின் உரிமையாளரிடம் முன்தொகை கொடுத்ததிலிருந்து பிடித்தம் செய்யும்படி கேட்டதற்கு, வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறிவிட்டார்.
இதனால் தற்போது நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலில் தவித்து வருகிறோம். ஒரு மாத காலம் அவகாசம் கேட்ட பின்பும் வீட்டில் மின்சாரம், தண்ணீர் இரண்டையும் ரத்து செய்துவிட்டார். இதற்கு மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.