கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் ஜவகர் பஜார் கடை வீதியில் சாலையோரம் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரை சாலையோரத்தில் துணிக் கடை அமைக்க விடாமல் சிலர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணேசன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.