கரூர் தாந்தோணிமலை பகுதியில் உள்ள அரசின் விளையாட்டு அரங்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியியல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். குழுப்பிரிவு போட்டிகளும் தனிநபர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது.
கரூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்டவைகளும் குழு போட்டிகளில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ், கேடயம் உள்ளிட்டவற்றை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார்.