தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது! - கரூரில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விளைந்த கஞ்சா செடி

கரூர்: ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!
குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!

By

Published : Nov 27, 2019, 3:25 PM IST

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாமரத்துப்பட்டி கிராமத்தில் அருணாசலம் என்பவர் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்நிலத்தின் ஒருபகுதியான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன் தலைமையில் சிறப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதை உறுதி செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் அருணாச்சலம் பெங்களூரில் இருப்பதாகவும் அவர் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் அவரின் மாமானர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் சிலரை வேலைக்கு வைத்து கஞ்சா பயிரை பயிரிட்டு வருவது தெரியவந்தது. பின்னர் முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

கரூரில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விளைந்த கஞ்சா பயிர்

மேலும் இதுகுறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சுமார் 250 கிலோ அளவுள்ள கஞ்சா கிடைக்கும் என்றும் அதிகபட்சமாக 15 லட்சம் மதிப்படையதாக இருக்கும் என்றார்.தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த அருணாச்சலம் காங்கிரஸ் கட்சியின் கடவூர் வட்டாரத் தலைவராக இருந்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:

தோல்வியில் முடிந்த சபரிமலை பயணம்: மும்பை திரும்பிய 'திருப்தி தேசாய்'

ABOUT THE AUTHOR

...view details