கரூர்: கடந்த 2020 ஜூன் 17ஆம் தேதி பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் பொறுப்பு விசாரணை அலுவலராக இருந்த காவல் ஆய்வாளர் ஜெகதீசன் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
தற்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள டி.பழூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் ஜெகதீசன், நீதிபதி அனுப்பிய அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட பின்னரும் நான்காவது முறையாக ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு காவல் ஆய்வாளர் ஜெகதீசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்ட ஜீலி; குதூகலத்தில் ரசிகர்கள்!