கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பாதுகாப்பிற்காக துணை ராணுவம் வருகை! - கரூர்
கரூர்: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் கரூர் வந்துள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை இராணுவம் வருகை!
அதன்படி பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 250 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பிற்காக மூன்று கம்பெனிகளின் 192 வீரர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் 50 பேர் கொண்ட பட்டாலியன் படை பிரிவைச் சேர்ந்த 10 உள்ளூர் காவலர்களும் என 252 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.