கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: 23 வேட்புமனுக்கள் நிராகரிப்பு! - கரூர்
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட 96 வேட்புமனுக்களில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
Aravakurichi
இதைத்தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் உள்ளிட்ட 68 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.