தழிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி! - senthil balaji
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 13ஆம் தேதி திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இதுவரை மூன்று வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான செந்தில் பாலாஜி, தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.