கரூர் மாவட்டத்தில் புகளுர் வேலாயுதம்பாளையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகிய இருவரும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து ஆலை மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் பின்னர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேசியபோது, ஆலை தற்போது நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.