தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை - அரசு மதுபானக் கடை

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000 பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அலுவலகம்
கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

By

Published : Oct 13, 2021, 4:02 PM IST

கரூர்: டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.62,000 பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளுக்கு கொண்டு செல்லும் மதுபாட்டில் குடோன் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அலுவலகங்களில் பரிசுப்பொருட்களும் லஞ்சப்பணமும் கொண்டு செல்லப்படலாம் என்பதை கண்காணிக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை

சார் ஆட்சியரின் வாகனம்

இதன்தொடர்ச்சியாக கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் சாமிநாதன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளியை ஒட்டி நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களின் சோதனையால் முக்கிய அரசு அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு மணிநேரத்தில் மாற்றுத்திறனாளியின் தாய்க்கு வீடு வழங்கிய ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details