கரூர்:கரூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமியின் மீது வந்த புகாரில் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பழனிச்சாமி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 20,500 ரூபாயையும், அவருக்கு உதவியாக இருந்த, ஓய்வு பெற்ற அரசு அலுவலக உதவியாளர் ராமனிடம் இருந்து 8,600 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரெமென்ஸ் துணிக்கடை உரிமையாளர்களை மிரட்டி, லஞ்சமாக வாங்கிய ரூ.7,500 மதிப்புள்ள துணிகளையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையிரனர் நடத்திய இந்த திடீர் சோதனையில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! - வ்
கரூரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் சோதனை நடத்தினர்.
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதையும் படிங்க:கொள்ளை நாடகமாடிய ஆடம்பர மனைவி! - விசாரணையில் அம்பலம்!