தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரவக்குறிச்சியில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்! - எடப்பாடி பழனிச்சாமி

கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

annamalai
annamalai

By

Published : Mar 18, 2021, 7:51 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் மிதிவண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். செந்தில் பாலாஜி தோல்வி பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார். இத்தொகுதியில் நான் வெற்றி பெற்று சாதாரண மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவேன்” என்றார்.

இதற்கிடையே, பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றின் போது அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடியதாக அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்!

இதையும் படிங்க:‘அதிமுகவினர் மீது தீர்ப்புகள் வந்தாலே அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்’

ABOUT THE AUTHOR

...view details