தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக வெற்றிக்காக தீயாய் வேலை செய்யும் டிடிவி...!' - பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

கரூர்: திமுக வெற்றிக்காக டிடிவி தினகரன் தீவிரமாக வேலை பார்க்கிறார் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

By

Published : May 15, 2019, 12:20 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தலைமையில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, ‘திமுகவின் மற்றொரு அணியாக டிடிவி தினகரன் செயல்பட்டுவருகிறார். அவர் திமுகவின் வெற்றிக்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவருக்கு மக்களைப் பற்றிய சிந்தனையோ, வேறு எதைப்பற்றிய சிந்தனையோ இல்லை. அது மட்டுமல்லாமல், ஸ்டாலின் என்னைப் பற்றியும், ராமதாசை பற்றியும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பிரதமர் மோடி பற்றியும் அசிங்கமாகப் பேசுகிறார்.

திமுக வெற்றிக்காக டிடிவி தினகரன் வேலை பார்க்கிறார் - அன்புமணி ராமதாஸ் சாடல்

மேலும், 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக இதுவரை ஒரு ஆணியைக் கூட பிடுங்கமுடியவில்லை. சந்திரசேகர் ராவ் சந்தித்ததற்கு காரணம் இருக்கிறது.

பாஜகவும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம், மூன்றாவது அணியை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது’ என அன்புமணி விமர்சித்துப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details