தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு தரப்பு மோதல்; காவல் நிலையம் முற்றுகை! - Anaiththu Velallar Kootamaippu

கரூர்: அனைத்து வேளாளர் கூட்டமைப்பினர் நள்ளிரவில் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து வேளாளர் கூட்டமைப்பு  கரூரில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வேளாளர் கூட்டமைப்பு  காவல் நிலையம் முற்றுகை  All velallar Federation  Anaiththu Velallar Kootamaippu  Anaiththu Velallar Kootamaippu besieges police station in Karur
velallar besieges police station in Karur

By

Published : Feb 17, 2021, 2:16 PM IST

கரூர் நகர காவல் நிலையத்தில் அனைத்து வேளாளர் கூட்டமைப்பு சார்பாக நள்ளிரவில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முன்னதாக அனைத்து வேளாளர் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன் நடத்திவரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும், கரூர் 80 அடி சாலை பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் ஆதரவு அமைப்பினர் சிலர் வாகனங்களில் வந்து இடையூறு செய்ததுடன் தகாத வார்த்தைகளால் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருப்பவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஏராளமானோர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் அழகுராம் புகாரைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் கரூர் 80 அடி சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனைத்து வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து அங்கு கூடி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டனர். சாதிய வன்முறைகளை தூண்டும் வகையில் நடப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாளை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்கள் நடைபெறுமென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை

ABOUT THE AUTHOR

...view details