தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமராவதி ஆற்றங்கரையில் குடிதண்ணீர் திருட்டு - கரூர் அமராவதி ஆற்றங்கரை

கரூர்: அமராவதி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கிணறு அமைத்து குடிதண்ணீரை திருடி லாரியில் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

அமராவதி ஆற்றங்கரையில் குடிதண்ணீர் திருட்டு
அமராவதி ஆற்றங்கரையில் குடிதண்ணீர் திருட்டு

By

Published : Apr 27, 2021, 12:25 PM IST

கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் சிலர் சட்டவிரோதமாகக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்து வருவதாகப் புகார் பெறப்பட்டது.

இதனையடுத்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தலைமையில் கரூர் வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தண்ணீர் ஏற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை அகற்றி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அமராவதி ஆற்றங்கரையில் குடிதண்ணீர் திருட்டு

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள பெரிய ஆண்டாங்கோயில், பெரியார் நகர், ஆண்டாங்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான குடிநீர் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமராவதி ஆற்றங்கரையில் குடிதண்ணீர் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details