தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'செந்தில் பாலாஜி கோட்டையில் வெற்றி'க்கொடி நாட்டிய அதிமுக! மகிழ்ச்சியில் ர.ர.க்கள்! - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர்: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், எட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உள்பட அனைத்து பதவிகளையும் அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர்.

admk-won-all-union-local-body-election-at-karur
admk-won-all-union-local-body-election-at-karur

By

Published : Jan 12, 2020, 2:10 PM IST

Updated : Jan 12, 2020, 2:47 PM IST

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் அம்மாவட்டத்திலுள்ள எட்டு ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக கண்ணதாசன், துணைத் தலைவராக தானேஷ் (எ) முத்துக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அனைத்திலும் அதிமுகவே வெற்றி வாகை சூடியது.

உள்ளாட்சித் தேர்தலில் கரூரை கைப்பற்றிய அதிமுக!

அதன்படி, வெற்றிபெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர்
க. பரமத்தி மார்க்கண்டயன் குழந்தைசாமி
அரவக்குறிச்சி வள்ளியாத்தாள் குருசாமி ஆண்டாள்
தாந்தோன்றி மலை சிவகாமி பெரியசாமி
கரூர் பாலமுருகன் தங்கராஜ்
தோகைமலை லதா ரங்கசாமி பாப்பாத்தி
குளித்தலை விஜய விநாயகம் இளங்கோவன்
கடவூர் செல்வராஜ் கைலாசம்
கிருஷ்ணராயபுரம் சந்திரமதி கவிதா

கரூர் மாவட்டம் அமமுகவிலிருந்து விலகி திமுக கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டை என்று கருதப்படுகிறது. இங்கு அனைத்துப் பதவிகளிலும் வெற்றிபெற்றிருப்பது கரூர் அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருச்சி கோட்டையைக் கைப்பற்றியது திமுக கூட்டணி!

Last Updated : Jan 12, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details