கரூர்: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளாகவும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் தேர்வுசெய்யப்பட்டவர்கள் சிலர் ஒரேநாளில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கரூர் மாவட்ட அதிமுக கடவூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமையில்
- கடவூர் ஊராட்சி ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் தேன்மொழி,
- அதிமுக கடவூர் ஒன்றிய இணைச் செயலாளர் கடவூர் சித்ரா,
- கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருக்காடுதுறை ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார்,
- குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
- 16 ஊராட்சி மன்றத் தலைவர்கள்
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நேற்று (ஜூன் 25) திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.