கரூர்: மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று (ஜூன்.19) மாலை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், ஓபிஎஸ்க்குநன்றி தெரிவித்தல், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.