தமிழ்நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக மக்கள் கூட்டம் கூடும் பல இடங்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஏழு கொங்கு தலங்களில் முதன்மை தலமான கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை சார்பில் வருகிற 31ஆம் தேதி வரை கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.