தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் வெடி, விஷம் கலந்து மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

கரூர்: "காவிரி ஆற்றில் வெடி, விஷம் கலந்து மீன் பிடித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என மீனவர் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் மீனவர் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம்
கரூர் மீனவர் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம்

By

Published : Feb 2, 2020, 9:54 AM IST

கரூர் மாவட்டம் மாயனூர் தண்ணீர் பாலம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மண்டபத்தில் குளித்தலை வட்டம் - உள்நாட்டு மீனவர் கூட்டம் சங்கத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அவற்றுள், முக்கிய தீர்மானங்களாக காவேரி ஆற்றில் வெடி, விஷ மருந்துகள் போட்டு மீன் பிடிப்பவர்கள் மீது மீன் வளத்துறை, காவல் துறை மூலமாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பசலி தொகை கட்டாதவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் பட்சத்தில் வலை பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூர் மீனவர் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம்

மேலும் இந்தக் கூட்டத்தில் சங்கத்து உறுப்பினர்கள், மீனவர்கள் அனைவரும் தீர்மானங்களை கடைபிடிக்காவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details