தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்: ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் - action against the bus driver and conductor

கரூர் அருகே பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில் நகரப்பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்
பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்

By

Published : Jun 8, 2022, 5:31 PM IST

கரூர்: கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி வரை செல்லக்கூடிய நகரப்பேருந்து கோடங்கிபட்டி என்ற பகுதிக்கு வந்தது. அப்போது தனது குழந்தையுடன் பெண் பயணி ஒருவர், பொருட்களை ஏற்றி விட்டு, குழந்தையையுடன் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர், அந்த பெண் பயணி ஏறுவதற்கு முன்பாக, பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்பெண் குழந்தை.. குழந்தை.. என்று கத்திக்கொண்டே ஓடியதால், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த பேருந்தை துரத்தி பிடித்து முற்றுகையிட்டனர்.

அந்த பெண் பயணியை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்

இந்நிலையில், கரூர் மண்டல பொது மேலாளர் குணசேகரன் பரிந்துரையின் பேரில், ஓட்டுநர் பன்னீர்செல்வம் காரைக்குடி மண்டலத்திற்கும், நடத்துனர் மகேந்திரன் தேவகோட்டை மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்து கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அவர்கள் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கரூர் மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, "பேருந்தில் ஏறிய பயணி முதலில் குழந்தையை ஏற்றிவிட்டு தான் வைத்திருந்த மூட்டையை எடுப்பதற்காக கீழே கவனித்துக் கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக அரசு ஓட்டுநர் வாகனத்தை இயக்கினார். அப்போது அப்பெண் குழந்தை பேருந்தில் இருப்பதை கண்டு கூச்சலிட்டு உள்ளார். அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடி எப்படி பயணி ஏறுவதற்குள் இயக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஓட்டுநர், நடத்துனர் இருவரும் பொதுமக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் அண்ணனை கொலை செய்த தம்பி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details